1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today share market sensex and nifty

ஹிண்டன்பர்க் அறிக்கையால் என்ன ஆச்சு பங்குச்சந்தை? இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

share
ஹிண்டன்பர்க்  அறிக்கை காரணமாக நேற்று பங்குச்சந்தை மிக மோசமாக சரியும் என்று எதிர்பார்த்த நிலையில் மிகக் குறைந்த அளவை சரிந்தது என்பதும் ஆனால் அதே நேரத்தில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் அதிகம் சரிந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஹிண்டன்பர்க்  அறிக்கைக்கு பிறகு இரண்டாவது நாளாக இன்றும் ஓரளவு தான் பங்கு சந்தை சரிந்து உள்ளது என்பதால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 175 புள்ளிகள் சார்ந்து 79 ஆயிரத்து 479 என்ற பள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 48 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 299 என்ற பள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதிலிருந்து ஹிண்டன்பர்க் அறிக்கை இந்திய பங்குச் சந்தையை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, கோல்ட் பீஸ், ஐடி பீஸ், ஐடிசி, கல்யாண ஜுவல்லர்ஸ், கரூர் வைஸ்யா வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளது. அதேபோல் மணப்புரம் கோல்டு, டாட்டா மோட்டார்ஸ், டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
7,ஆம் வகுப்பு படிக்கும் 12,வயது சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!