திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (07:16 IST)

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி.. இன்று பங்குச்சந்தை வீழ்ச்சி அடையுமா? முதலீட்டாளர்கள் அச்சம்..!

அதானி  குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில் இன்று பங்குச்சந்தை வீழ்ச்சி அடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் முதலீட்டாளர்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

அதானி குழுமம் வெளிநாட்டில் வைத்துள்ள போலியான நிறுவனங்களில் செபியின் தலைவர் மாதபி புச் என்பவருக்கு பங்குகள் உள்ளன என ஹண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு மாதபி புச் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிக்கை உள்நோக்கம் கண்டது என்று அதானி நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை தொடங்கும் போது பங்குச்சந்தை வீழ்ச்சி அடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே போன்று கடந்த ஜனவரி மாதம் அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு கூறியபோது பங்குச்சந்தை படுமோசமாக சரிந்தது என்பதும் இதனால் அதானி குழும பங்குகளை வைத்திருந்த பங்குதாரர்களுக்கு 11 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இன்றும் அதே போன்ற நிலைமை வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Siva