திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (12:42 IST)

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி: அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் பங்குகள் சரிவு..!

ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக பங்குச்சந்தை இன்று மிக மோசமாக சரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பங்குச்சந்தை இன்று காலை ஆரம்பத்தில் சரிந்தாலும் தற்போது மீண்டும் பங்குச்சந்தை உயந்துள்ளது என்பதும், சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது என்பதால் ஹிண்டன்பர்க் அறிக்கையை பங்குச்சந்தை வர்த்தகர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் மட்டும் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அதானி குடும்பத்தின் பங்குகள் குறித்து தற்போது பார்ப்போம் . 
 
அதானி என்ர்ஜி 17%, அதானி டோட்டல் கேஸ் 13.39 %, எண்டிடிவி 11 %, மற்றும் அதானி பவர்%, சதவிகிதம் சரிவை கண்டுள்ளது. மேலும், அதானி என்ர்ஜி 6.96%, அதானி வில்மர் 6.49%, அதானி என்டர்பிரைசஸ் 5.43%, அதானி போர்ட் 4.95%, அம்புஜா சிமென்ட்ஸ் 2.53%, ஏசிசி 2.42% சரிந்துள்ளது.
 
கடந்தாண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தபோது  அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை கண்டாலும் சில நாட்களில் மீண்டும் உயர்ந்துவிட்டதை அடுத்து இந்த முறையும் அதேபோல் உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran