தொடர்புடைய செய்திகள்
- பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் குஷி.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- பட்ஜெட்டால் வீழ்ச்சி அடைந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- பட்ஜெட்டுக்கு பின் தொடர் வீழ்ச்சியில் பங்குச்சந்தை.. இன்றும் 500 புள்ளிகள் சரிவு..!
- பட்ஜெட்டிற்கு பின் 2வது நாளாக சரியும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
இந்த வாரத்தில் 3வது நாளாக உயரும் பங்குச்சந்தை.. இன்றைய செக்செக்ஸ் நிலவரம்..!
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச் சந்தை உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பாக பட்ஜெட்டுக்கு பின் நல்ல ஏற்றம் கண்டிருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த வாரத்தில் நேற்று முன்தினமும் பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் பங்குச்சந்தை உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை பங்குச்சந்தை சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 160 புள்ளிகள் உயர்ந்து 81, 697 என்ற நிலையில் சென்செக்ஸ் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 56 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 916 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பங்கு சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இன்றைய பங்கு சந்தையில் ஆசியன் பெயிண்ட், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர், இண்டஸ் இன்ட் வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
Edited by Siva
