3வது நாளாக பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை உயந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியில் புதிய அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பங்குச்சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் மும்பை பங்குச்சந்தை என்று 95 புள்ளிகள் உயர்ந்து 77 ஆயிரத்து 393 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் தேசிய பங்குச்சந்தை நிப்டி 14 புள்ளிகள் குறைந்து 23 ஆயிரத்து 543 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை இன்று சிறிய அளவில் தான் ஏற்றத்தில் இருக்கும் நிலையில் மதியத்திற்கு பின் திடீரென பங்குச்சந்தை குறையவும் வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசி வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
Edited by Siva