3 நாட்களுக்கு பின் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று பக்ரீத் விடுமுறை தினம் என்பதை அடுத்து இன்று காலை பங்கு சந்தை தொடங்கியது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலில் உயர்ந்து வருவதாகவும் குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 280 புள்ளிகள் உயர்ந்து 77272 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது அதே போல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 77 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 542 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பங்குச்சந்தை கடந்து செல்ல நாட்களாக உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது என்பதும் குறிப்பாக தேர்தல் முடிந்து புதிய ஆட்சியை அமைத்ததில் இருந்து உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்னும் பங்குச்சந்தை அதிக அளவு உயர தான் வாய்ப்பிருப்பது என்பதால் பங்குச்சந்தை நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து நல்ல நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம் என்று பரிந்துரை கூறப்பட்டு வருகிறது
Edited by Siva