1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today share market sensex and nifty

வாரம் முழுவதும் பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றும் உயர்ந்த சென்செக்ஸ்.. நிஃப்டி..!

share
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மத்தியில் ஒரு நிலையான ஆட்சி அமைந்த நிலையில் பங்குச்சந்தை தொடர் ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் இந்த வாரம் முழுவதுமே கிட்டத்தட்ட பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலை பங்குச்சந்தை தொடங்கும் போது ஏற்றத்தில் இருந்த நிலையில் சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 75 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து 892 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 23,440 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஹெச்சிஎல் டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.


Edited by Siva

 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மறுவாக்கு எண்ணிக்கை இல்லை.. நீதிமன்றம் செல்லுங்கள்: விஜய பிரபாகரனுக்கு தேர்தல் ஆணையம் பதில்..!