வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 3 ஜூன் 2024 (10:44 IST)

எக்சிட் போல் எதிரொலி.. ஒரே நாளில் 2100 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..!

share
ஜூன் ஒன்றாம் தேதி மாலை வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக மீண்டும் வெற்றி பெறும் என்றும் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில் இன்று சென்செக்ஸ் அசுரத்தனமாக உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போல் உள்ளதாக கூறப்படுகிறது.

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் பங்குச்சந்தை உச்சத்துக்கு செல்லும் என்றும் பாஜக ஆட்சியை இழந்தால் பங்குச்சந்தை சரியும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் 2100 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரம் புள்ளிகளுக்கும் அதிகமாக வர்த்தகம் ஆகி வருகிறது. இது பங்குச்சந்தையின் புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 622  புள்ளிகள் உயர்ந்து 23,164 என்ற புள்ளிகளில் விற்பனையாகி வருகிறது. ஒரே நாளில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி மிக வேகமாக உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது.

Edited by Siva