தொடர்புடைய செய்திகள்
- வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
- வாரத்தின் கடைசி நாளில் திடீரென சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- பெரிய அளவில் ஏற்ற இறக்கமின்றி பங்குச்சந்தை.. தேர்தல் வரை இப்படித்தான் இருக்குமா?
- பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- உச்சத்திற்கு சென்ற பின் மீண்டும் உயர்கிறது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் குஷி..!
இரண்டாவது நாளாக பங்குச்சந்தை ஏற்றம்.. 75 ஆயிரத்தை தாண்டிய சென்செக்ஸ்..!
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்று வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை ஏற்றம் கண்டது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 310 புள்ளிகள் அதிகரித்து 75052 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது
அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 85 புள்ளிகள் அதிகரித்து 22751 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் தேர்தல் வரை பங்கு சந்தை நிதானமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது
இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிடல், சிப்லா, ஐடிசி , மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் கல்யாண் ஜூவல்லர்ஸ். கரூர் வைசியா வங்கி. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Edited by Siva
