1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

மீண்டும் இன்று உயர்ந்த தங்கம் விலை.. இதற்கு ஒரு முடிவே இல்லையா?

சென்னை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் இருந்து வருகிறது என்பதும் நேற்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று ஒரு கிராமத்தை பத்து ரூபாய் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ரூபாய் 6,660 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 அதிகரித்து   ரூபாய் 53360 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7140 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,120 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 88.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 88000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
வலிமை வாய்ந்தவரை எதிர்த்து போட்டியிடுகிறார் நமது வேட்பாளர்- எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை