திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (10:17 IST)

வாரத்தின் கடைசி நாளில் திடீரென சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இன்று வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை 140 புள்ளிகள் சரிந்து 74,089 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 40 புள்ளிகள் குறைந்து 22,475 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

பங்குச்சந்தை இன்று சரிந்தாலும் பெரிய அளவில் சரியில்லை என்பதும் கிட்டத்தட்ட 100 புள்ளிகள் மட்டுமே சரிந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் தேர்தல் வரை பங்குச்சந்தை மந்தமாகவே தான் இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் தேர்தலுக்குப் பின் புதிய நிறுவனங்களில் முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த நிலையில் இன்றைய பங்குச்சந்தையில் பேங்க் பீஸ், சிப்லா, ஐடிசி மற்றும் கரூர் வைசியா வங்கி ஆகிய  பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஏபிசி கேப்பிட்டல், கோல்ட் பீஸ், ஐடி பீஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ், மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Edited by Siva