1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today petrol and diesel rate at Chennai

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? சென்னை நிலவரம்!

பெட்ரோல்
கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.


கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை ஒரே நிலையில்தான் விற்பனையாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 

அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் நேற்றைய நிலையில்தான் விற்பனையை செய்யப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிடமிருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யாத நிலையில் இந்தியா மட்டும் துணிச்சலாக 30 சதவீதம் சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணையை வாங்கி குவித்தது

இதன் காரணமாக அண்டை நாடுகளில் பெட்ரோல் விலை விண்ணைத் தொட்டாலும் இந்தியாவில் மட்டும் கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited By: Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
இலங்கை மலையக தமிழர்கள்: 200 வருடங்களில் "தோட்டக்காட்டான்" பெயரே மிஞ்சியது