தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல்-2020; சீறிய சென்னை கிங்ஸ்...20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..
- ஐபிஎல்-2020 ; 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த சென்னை கிங்ஸ் !
- ’’சென்னை கிங்ஸ் வெற்றி பெற....உங்களைக் குறித்து யோசியுங்கள்’’ - தோனிக்கு ஷேவாக் அட்வைஸ்
- ஐதராபாத் vs சிஎஸ்கே: கடைசி ஐந்து போட்டிகளின் முடிவுகள்
- கணவன் மனைவி சண்டை! தடுக்க போன திமுக பிரபலம்! – அரிவாள் வெட்டால் மருத்துவமனையில் அனுமதி
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்து 38,704-க்கு விற்பனை!
கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார ஏற்ற இறக்கங்களால் எகிறிய தங்கம் விலை இன்று விலை குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்து 38,704-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.47 குறைந்து ரூ.4,838-க்கு விற்பனை ஆகிறது.
