புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2020 (18:28 IST)

ஐதராபாத் vs சிஎஸ்கே: கடைசி ஐந்து போட்டிகளின் முடிவுகள்

ஐதராபாத் vs சிஎஸ்கே: கடைசி ஐந்து போட்டிகளின் முடிவுகள்
இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகளில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இதுவரை இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று எட்டாவது போட்டியாக ஐதராபாத் அணியுடன் இன்று விளையாடவுள்ள சிஎஸ்கே அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது 
 
இதற்கு முன்னர் ஐதராபாத் அணியுடன் சிஎஸ்கே மோதிய கடைசி 5 போட்டிகளில் மூன்றில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளிலும் ஐதராபாத் அணியை சிஎஸ்கே அணி வென்றுள்ளது. 2019ஆம் ஆண்டு நடந்த இரண்டு லீக் போட்டிகளில் ஐதராபாத் அணியை ஒரு முறை வெற்றியும் ஒருமுறை தோல்வியும் அடைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு நடந்த லீக் போட்டியில் தோல்வி அடைந்த சென்னை அணி இன்று மீண்டெழுந்து வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 
 
மேலும் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக இருக்கும் டேவிட் வார்னர் 133 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக பணிபுரிந்து உள்ளார் என்பதும் சென்னை அணிக்கு கேப்டனாக இருக்கும் தல தோனி 197 போட்டிகளில் கேப்டனாக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது