ஏறுமுகத்தில் தங்கம் - இன்றைய விலை நிலவரம்!!
கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த தங்கம் தற்போது அதிரடியாக விலை உயர தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது மீண்டும் ஏறுமுகத்தில் விற்பனை ஆகி வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.37,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதாவது தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.4,745க்கு விற்பனை செய்யப்படுகிறது.