செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2020 (11:10 IST)

சிஸ்டம் சரியில்லன்னு சொல்றவங்ககிட்ட வாக்காளர் அட்டையே இல்ல! – மறைமுகமாய் தாக்கினாரா கமல்?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாய் ஈடுபட்டு வருகின்றன. பல கட்சிகள் தங்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் பிரச்சாரம், சர்வே என பிஸியாக உள்ளன. இந்நிலையில் இளைஞர்கள் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஓரிடத்தில் ”மாற்றம் வரணும், சிஸ்டம் சரியில்ல, எல்லாரும் திருட்டு பசங்க என கீ போர்டில் கதக்களி ஆடும் பலரிடம் வாக்காளர் அடையாள அட்டையே இல்லை” என கமல்ஹாசன் பேசியுள்ளார். அதில் அவர் ‘சிஸ்டம் சரியில்ல’ என்று குறிப்பிட்டு ஸ்டார் நடிகர் ஒருவரை மறைமுகமாக தாக்குவதாக சமூக வலைதளங்களில் சிலர் கிளப்பி விட இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிவரும் மய்யத்தார் ‘கமல்ஹாசன் குறிப்பிட்டு யாரையும் தாக்கும் விதமாக அவ்வாறு பேசவில்லை. இளைஞர்கள் வாக்கு செலுத்துவதன் முக்கியத்துவத்தை உணராமல் சமூக வலைதளங்களில் மட்டும் அரசியல் பேசி வருவதை சுட்டிக்காட்டியே அவ்வாறு பேசியுள்ளார்” என கூறிவருகின்றனர்.