அதிக ஆட்களை சேர்த்தால் தங்க மோதிரம் பரிசு: திமுக பளே ப்ளான்!!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 20 நவம்பர் 2020 (09:29 IST)
கோவையில் அதிக வாக்காளர்களைச் சேர்க்கும் திமுகவினருக்குத் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என அறிவிப்பு. 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் தேர்தல் தற்போது தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு கோவை திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் சேனாதிபதி, கோவையில் அதிக வாக்காளர்களைச் சேர்க்கும் திமுகவினருக்குத் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
 
சூலூர் தொகுதி தொடர்பாக சேனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகமாக புதிய வாக்காளர்களைக் கட்சியில் சேர்த்துவிடும் நபர்களுக்கு முதல் பரிசாக ஒரு பவுன் தங்க மோதிரமும், 2 ஆவது, 3 ஆவது பரிசாக அரை பவுன் தங்க மோதிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :