1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லுமா?

Gold
தங்கம் விலை நேற்று குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இன்று திடீரென ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 560 உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் நகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று மட்டும் தங்கம் ஒரு கிராமுக்கு 70 ரூபாயும் ஒரு சவரனுக்கு 560 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ரூபாய்   7,160 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 560 உயர்ந்து ரூபாய்  57,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,665 எனவும் ஒரு சவரன் ரூபாய் 61,320 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறத
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரி கிடையாதா?