அமெரிக்க நாடாளுமன்றத்தை ஆளப்போவது யார்? - இன்று தேர்தல்
அமெரிக்க நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்த போவது யார் என்கிற எதிர்பார்ப்புடன் இந்திய நேரப்படி இன்று மாலை 4:30 மணி அளவில் அமெரிக்காவில் இடைக்கால தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குகிறது.
இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆளும் குடியரசு கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
கீழவையான பிரதிநிதிகள் சபையின் அனைத்து 435 இடங்களுக்கும், மேலவையான சபையில் மொத்தம் 100 இடங்களில் காலியாகும் 35 இடங்களுக்கும் இன்று நடைபெறுகிறது. நவம்பர் 4ம் தேதி நாளை அதிகாலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கிறது.