தொடர்புடைய செய்திகள்
- பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்கு 44 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு-அமைச்சர் தங்கம் தென்னரசு!
- ஒரு படைப்பாளியாக என்னால் சுதந்திரமாக செயல்படமுடியவில்லை… மாரி செல்வராஜ் ஆதங்கம்!
- சென்னை, தாம்பரம் கடைகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.. என்ன காரணம்?
- தாலியை கழற்றி கணவனின் கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!
- இன்று மாலை 12 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தொடர் ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. சென்னை நிலவரம்..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சற்றே குறைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
சென்னையில் இன்று ஒரு கிராம் 30 ரூபாயும் ஒரு சவரன் 240 ரூபாயும் குறைந்து உள்ள நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூபாய் 6,680 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 குறைந்து ரூபாய் 53,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,135 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,080 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 92.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 92,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
