தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டுல மட்டும் இப்படி பண்றாங்க? மோடி ஜீ இத கேக்க மாட்டீங்களா? - நடிகர் விஷால் ஆதங்கம்!
- தென்மாவட்ட ரயில்கள் நாளை முதல் சென்னை வராது! எங்கு நிறுத்தப்படும்? என்ன காரணம்?
- சென்னையில் கார் பந்தயம்.. மீண்டும் நடைபெறும் பணிகள்.. ஆகஸ்ட் 31ல் ஆரம்பம்..!
- சென்னையில் ஆகஸ்ட் 4-ம் தேதி மதிமுக பொதுக்குழு..! வைகோ அறிவிப்பு..!!
- சென்னையில் 19 அம்மா உணவகங்கள் மூடல்.! மூடிய உணவகங்களை திறந்திடுக.! இபிஎஸ் ஆவேசம்.!!
ஒரு வாரமாக சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலை என்ன.. சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு?
கடந்த ஒரு வாரமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிந்து வந்த நிலையில் இன்றும் சரிந்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 6,825 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 54,600 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,295 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,360 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 96.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 96,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
