ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஜூலை 2024 (14:36 IST)

தமிழ்நாட்டுல மட்டும் இப்படி பண்றாங்க? மோடி ஜீ இத கேக்க மாட்டீங்களா? - நடிகர் விஷால் ஆதங்கம்!

தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுவதுடன், உள்ளாட்சி வரியும் வசூலிக்கப்படுவதால் திரைத்துறையினர் நஷ்டத்தை சந்தித்து வருவதாக நடிகர் விஷால் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்புகளை வகித்தவர் விஷால். நடிகர் விஷால் நேற்று முன்னாள் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் 75வது பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தமிழகத்தில் உள்ள ஜிஎஸ்டி வரி விவகாரத்தை கவனிக்குமாறு பிரதமரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் மட்டும்தான் இரண்டு வரி வசூலிக்கும் முறை உள்ளது. ஒரே நாடு ஒரே வரி சென்று சொன்னபோது உங்களை நம்பினேன். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது.

இது உண்மையில் திரைத்துறையினரை அதிகம் பாதிக்கிறது. 8 சதவீதம் உள்ளாட்சி வரி செலுத்துவது தயாரிப்பாளர்களுக்கு பெரிய சுமையாக உள்ளது. இந்த ஆண்டு திரைத்துறைக்கே மோசமான ஆண்டாக மாறியுள்ளது. யாரும் இழப்பை பற்றி பேசாமல், வலியை மனதிற்குள் வைத்துக் கொள்கின்றனர். நாங்கள் ஆடம்பர வாழ்க்கை கேட்கவில்லை. சாதாரண வாழ்க்கையையாவது வாழ வாய்ப்புக் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” என பேசியுள்ளார்.

Edit by Prasanth.K