1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

தங்கம், வெள்ளி விலை இன்று திடீர் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

சென்னை
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக சிறிய அளவில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்றும் சிறிய அளவில் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் எவ்வளவு? சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி எவ்வளவு? என்பதை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய்   6,785 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து  ரூபாய் 54,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,2555 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,040 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 99.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 99,700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
 
அடுத்த கட்டுரையில்
குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: அனைத்து அருவிகளில் குளிக்கத் தடை.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி..!