1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 13 ஜூலை 2024 (20:14 IST)

சென்னையில் இளையராஜா இசைக்கச்சேரி.. இலவச மெட்ரோ ரயில் பயணம் குறித்த அறிவிப்பு..!

சென்னையில் இசைஞானி இளையராஜா இசை கச்சேரி நடைபெற இருப்பதை அடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் நாளை நந்தனம் மைதானத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற உள்ளது. இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏராளமான டிக்கெட் விற்பனை செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னையின் அனைத்து ரயில் நிலையத்திலிருந்து நந்தனம் மெட்ரோ வரை செல்லும் ரசிகர்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்துள்ளது.

இதற்காக மெட்ரோ பாஸ்கள் வழங்கப்பட இருப்பதாகவும் இந்த பாஸ்களை தானியங்கி வாசல்களில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஸ்கேன் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது இதேபோன்று இலவச ரயில் பயணம் குறித்து அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட நிலையில் தற்போது இசைஞானி இளையராஜா இசை கச்சேரிக்கும் அதே போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran