செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 மே 2024 (18:18 IST)

எங்க ஊரு பொண்ணுமா நீ.. முப்பாத்தம்மன் கோவிலில் ஜான்வி கபூர் தரிசனம்!

Jahnvi Kapoor
நேற்று நடந்த ஐபிஎல் இறுதி போட்டிகளை காண சென்னை வந்த நடிகை ஜான்வி கபூர் சென்னையின் பிரபலமான பல பகுதிகளுக்கு சென்று வருகிறார்.



இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் முதல் மகள். தற்போது இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக உள்ள ஜான்வி கபூர் தற்போது ராஜ்குமார் ராவுடன் இணைந்து ”மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி” என்ற படத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக கொண்ட இந்த படத்தின் ப்ரொமோஷனுக்காக ஜான்வி நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் இறுதி போட்டியை காண வந்திருந்தார்.

போட்டி முடிந்த கையோடு புறப்படாமல் தன் தாயாரின் சொந்த நிலத்தில் சில பகுதிகளை சுற்றி பார்க்க திட்டமிட்டுள்ளார். அதன்படி சென்னையில் உள்ள புகழ்பெற்ற முப்பாத்தம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஜான்வி கபூர், அந்த கோவில் தனது தாயாருக்கு மிகவும் பிடித்த கோவில் என்று கூறியுள்ளார்.

அதில் கமெண்ட் செய்துள்ள பலரும் ஸ்ரீதேவி சென்னையை மிகவும் விரும்பியதாகவும், ஜான்வி கபூர் தனது தாயாரின் சொந்த ஊருக்கு சென்று வர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Edit by Prasanth.K