ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 மே 2024 (10:17 IST)

16 வயது சிறுமியுடன் நடந்து சென்ற இளைஞரை வழிமறித்த கும்பல்.. வீடுபுகுந்து வெட்டியதால் அதிர்ச்சி..!

சென்னை டி.பி சத்திரம் என்ற பகுதியைச் சேர்ந்த இஸ்ரவேல் என்ற இளைஞர் ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமியும், தன்னுடைய காதலியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார் 
 
அப்போது திடீரென அவர்கள் இருவரையும் வழிமறித்த கும்பல் தகராறு செய்ததாகவும் இந்த தகராறில் இஸ்ரேல் மற்றும் 16 வயது சிறுமி ஆகிய இருவரையும் அந்த ரவுடி கும்பல் வீடு புகுந்து வெட்டியதாகவும் தெரிகிறது
 
அதுமட்டுமின்றி இந்த காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் சாகவும் வைத்ததாக கூறப்படுகிறது. இந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இணையத்தில் வைரலான நிலையில் இது குறித்து விசாரணை செய்த போலீசார் தாக்குதல் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர்
 
கைது செய்யப்பட்ட   டி.பி சத்திரத்தைச் சேர்ந்த ரவுடி அப்பாஸ் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையில் பட்டப்பகலில் இளைஞர் மற்றும் 16 வயது சிறுமியை வழிமறித்து ஒரு கும்பல் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran