1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. today gold and silver rate at Chennai

தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்தது.. சென்னை நிலவரம் இதோ..!

தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 6,600 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 52,800 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.53,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,070 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,560 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 86.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 86,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Mahendnra
 
About Writer
Mahendnra
அடுத்த கட்டுரையில்
ஒரே நாளில் ரூ.40 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.. பறக்கும் படையினர் அதிரடி..!