தொடர்புடைய செய்திகள்
- பெண் காவலர்களை உல்லாசத்துக்கு அழைக்கும் டுபாக்கூர் போலீஸ் அதிகாரி! – வளைத்து பிடித்த ஒரிஜினல் போலீஸ்!
- தமிழகத்தில் மழைக்கான ஆரஞ்சு அலர்ட்.. 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை..!
- என்ன பழக்கம்ணா இது? ஜாலி ரீல்ஸ் பண்ணிய பதிரனா, முஸ்தபிசுர்! – மனக்குமுறலில் நாகினிஸ், லங்கன் ரசிகர்கள்!
- இன்று ஒரே நாளில் சுமார் 1000 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!
- ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!
இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.640 உயர்வு..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 640 உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூபாய் 6,715 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 640 உயர்ந்து ரூபாய் 53,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,185 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,480 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 87.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 87,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
