1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

தங்கம் விலை எதிர்பாராத வகையில் வீழ்ச்சி.. ஒரே நாளில் ரூ.800 குறைவு..!

சென்னை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ரூபாய் 6,615 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 800 குறைந்து ரூபாய் 52,920 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.53,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,085 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,680 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 87.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 87,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது


Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. தேர்தல் ரிசல்ட்டுக்குள் இன்னும் சரியுமா?