தொடர்புடைய செய்திகள்
- உள்ளாடையில் 10.3 கிலோ தங்கம் கடத்திய 2 பெண்கள் சென்னையில் கைது.. சுங்கத்துறையினர் அதிரடி
- புனித வெள்ளி விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
- தங்கம், வெள்ளி விலை இன்று சரிவு.. ஆனாலும் 50 ஆயிரத்தை நெருங்கும் என தகவல்..!
- பிரேசிலில் கனமழை மற்றும் நிலசரிவு- 23 பேர் பலி
- வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை ஏற்றம்.. ஒரே நாளில் ரூ.160 உயர்வு..!
ஒரே ஒரு நாள் தான் சரிவு.. மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் நேற்று ஒரே ஒரு நாள் மட்டும் சரிந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 15 ரூபாயும் ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ரூபாய் 6,215 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் ரூபாய் 49,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6685 எனவும் ஒரு சவரன் ரூபாய் 53,480 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 80.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80,200 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
