திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 27 மார்ச் 2024 (11:45 IST)

கூகுள் பே மூலம் பிச்சை கேட்கிறார்கள்.. பிக்பாஸ் நடிகையின் அதிர்ச்சி பதிவு..!

கூகுள் பே மூலம் பிச்சை கேட்கிறார்கள் என பிரபல நடிகை சமூக வலைதளத்தில் அதிர்ச்சியுடன் கருத்தை பதிவு செய்துள்ளார். 
 
பிரபல பாலிவுட் நடிகை மற்றும் பிக் பாஸ் ஹிந்தி 14வது சீசனில் போட்டியாளராக இருந்தவர் நடிகை ஹினாகான். இவர் தற்போது சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் ஹினாகான் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் தான் காரில் சென்று கொண்டிருந்தபோது சிக்னலுக்காக காத்திருந்ததாகவும், அப்போது ஒருவர் கண்ணாடியை தட்டி யாசகம் கேட்டதாகவும் என்னிடம் பணம் இல்லை என்று கூறிய போது ’வீட்டில் தம்பி தங்கைகள் எல்லாம் பசியோடு இருக்கிறார்கள், தயவுசெய்து ஏதாவது கொடுத்து உதவுங்கள் என்ற அந்த நபர் கூறிய போது நான் மீண்டும் ’உண்மையாகவே என்னிடம் பணம் இல்லை’ என்று கூறினேன் 
 
உடனே அவர் அந்த நபர் பரவாயில்லை மேடம் கூகுள் பே மூலம் பணம் அனுப்புங்கள் என்று கூறி ஒரு எண்ணை கொடுத்தார். நான் அவருக்கு பணம் அனுப்ப முயற்சித்தபோது, ’ஒரு வாரத்துக்கு தேவையான செலவுகளுக்கு பணம் அனுப்புவது மேடம்’ என்று அவர் என்னிடம் கூறியது என்னை அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இதற்கு நான்  என்ன பதில் சொல்ல என்று எனக்கு தெரியவில்லை’ என்று கூறியுள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

Edited by Mahendran