1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. today gold and silver rate at chennai

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.320 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

Gold
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 25 ரூபாயும் ஒரு சவரனுக்கு 200 ரூபாயும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5,840  என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 உயர்ந்து ரூபாய் 46,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,310 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50,480 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 76.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
2 நாள் பெரிய சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!