1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2024 (10:26 IST)

காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி.. யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவை எதிர்த்து புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவு ஆகிய மூன்று கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்துள்ளன.
 
 பாஜகவை எதிர்க்க நாடு முழுவதும் இந்தியா கூட்டணி என்ற கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் தனியாக மகா விகாஸ் அகாடி கூட்டணி என்று அமைக்கப்பட்டுள்ளது 
 
இந்த கூட்டணியில் எதிர்க்கட்சிகளான உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா பிரிவுக்கு 20 தொகுதிகள், காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகள், சரத்பவாரின்  தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன 
 
இந்த கூட்டணி பாஜகவை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்ய இருக்கும் நிலையில் பாஜகவை இந்த கூட்டணி வீழ்த்துமா என்பதை தேர்தல் முடிவு வரும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran