1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

இரண்டாவது நாளாக சரிந்த தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

சென்னை
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் நேற்று தங்கம் விலை சரிந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் சரிந்து உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூபாய் 5795 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 குறைந்து  ரூபாய் 46,360 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,265 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50,120 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 76.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
வாரத்தின் கடைசி நாளில் நம்பிக்கை அளித்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!