ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2024 (18:25 IST)

ஐபிஎல் தொடரில் ஆரம்பமே அமர்க்களம்..! முதல் போட்டியில் சென்னை - பெங்களூர் மோதல்..!

ipl match
ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணை வெளியாகி உள்ள நிலையில், ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
 
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வாக அறவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 
நடப்பு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10 அணிகளுக்கு மொத்தம் 24 போட்டிகள் நடைபெறுகின்றன.
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னை பெங்களூர் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஒன்பதாவது முறையாக முதல் போட்டியில் களம் காண்கிறது.
 
மார்ச் 26-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை, குஜராத் அணிகள் மோதுகின்றன.  விசாகப்பட்டினத்தில் மார்ச் 31ம் தேதி டெல்லியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி பலப்பரீட்சை நடத்துகிறது
 
மார்ச் 23, 24, 31 ஏப்ரல் 7 ஆகிய நாட்களில் பிற்பகல், மாலை என இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.

 
தற்போது, முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் இரண்டாம் கட்ட ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.