தொடர்புடைய செய்திகள்
- சென்னை ஏடிஎமில் கட்டுக்கட்டாக பணம் டெபாசிட் செய்த இளைஞர்கள்.. விசாரணையில் திடுக் தகவல்..!
- சென்னையின் பிரபல திரையரங்கமான ‘உதயம்’ மூடப்படவுள்ளதாக தகவல்!
- காதலர் தினத்திற்கு எதிராக போராட்டம்: மெரினா கடற்கரையில் போலீஸ் குவிப்பு..!
- வெற்றி துரைசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்
- அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்- அரசு கோரிக்கை
இன்று ஒரே நாளில் சுமார் 500 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!
இன்று ஒரே நாளில் தங்கம் விலை 480 ரூபாய் ஒரு சவரனுக்கு குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமத்தில் 60 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ரூபாய் 5,750 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 குறைந்து ரூபாய் 46,000 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,220 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49,760 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.75.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
