1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (19:01 IST)

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்- அரசு கோரிக்கை

st  George port-tamilnadu
அரசு  ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என  தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இடை  நிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் அறிவித்திருந்த நிலையில், வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் போராட்ட்டம் நடத்தப்படும் என்று  அறித்துள்ளது.
 
இந்த நிலையில், அரசு  ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என  தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
 
இதுகுறித்து தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
 
தமிழ்நாட்டில் விரைவில் நிதி நிலைமை சீரானவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.