1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2024 (11:03 IST)

காதலர் தினத்திற்கு எதிராக போராட்டம்: மெரினா கடற்கரையில் போலீஸ் குவிப்பு..!

சென்னை மெரினா கடற்கரையில் காதலர் தினத்துக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் போராட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால்து மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
 இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்துள்ளனர். 
 
இதனை அடுத்து உதவி ஆணையர்  தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட சென்னை மெரினா சிலை அருகே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்து மக்கள் கட்சியினர் போராட வந்தால் அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran