1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 ஜனவரி 2024 (12:25 IST)

பொங்கலை முன்னிட்டு திடீரென 200 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5870.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 அதிகரித்து ரூபாய் 46960.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6340.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50720.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம்  ரூபாய் 78.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78300.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva