பொங்கல் திருநாளில் பொங்கியது சென்செக்ஸ்.. ஒரே நாளில் 600 புள்ளிகள் உயர்வு..!
இன்றைய பொங்கல் திருநாளில் பங்குச்சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய பங்குச்சந்தையின் வர்த்தகம் இன்று காலை தொடங்கிய நிலையில் ஆரம்பத்தில் இருந்து சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்வில் உள்ளது. சற்றுமுன் சென்செக்ஸ் 625 புள்ளிகள் உயர்ந்து 73 ஆயிரத்து 193 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 165 புள்ளிகள் உயர்ந்து 22,060 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. வாரத்தின் முதல் நாள் மற்றும் பொங்கல் திருநாளில் பங்குச்சந்தை நல்ல அளவில் உயர்ந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு கூடுதலாக முதலீடு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இன்றைய பங்குச்சந்தையில் சிப்லா, ஃபார்மா பீஸ், ஐடி பீஸ், மலப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் கல்யாணி ஜூவல்லrஸ், டாட்டா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Siva