1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 ஜனவரி 2024 (08:08 IST)

காணும்பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள்: முழு விபரங்கள்..!

சென்னையில் ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாட இருக்கும் நிலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
 
மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும் போது போர்நினைவுச் சின்னத்தில் இருந்து ( War Memorial) வரும் வாகனங்கள் வழக்கம் போல் கலங்கரை விளக்கம் ( Light House) நோக்கி அனுமதிக்கப்படும். 
 
கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு (Compulsory Left Diversion) பாரதி சாலை பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
 
வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ( விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படும்) வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
வாகன நிறுத்தம் இடத்தின் ஏற்பாடுகள்: பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பின்வரும் பார்க்கிங் இடங்கள் ஒதுக்கப்படும்.
 
ஃபோர்ஷோர் சாலை
விக்டோரியா வார்டன் விடுதி
கலைவாணர் அரங்கம் பார்க்கிங்
பிரசிடென்சி கல்லூரி
மெட்ராஸ் பல்கலைக்கழகம்
டிடி கேந்திராவிற்கு அப்பால் ஆடம்ஸ் சாலை (சுவாமி சிவானந்தா சாலை)
MRTS - சேப்பாக்கம்
லேடி வெலிங்டன் பள்ளி
ராணி மேரி மகளிர் கல்லூரி
சீனிவாசபுரம் லூப் ரோடு / மைதானம்
PWD மைதானம் (தலைமைச் செயலகம் எதிரில்)
செயின்ட் பீட் மைதானம்
அன்னை சத்யா நகர்
ஈ.வி.ஆர்.சாலை, மருத்துவக் கல்லூரி மைதானம் (வேன் பார்க்கிங்)
தலைமைச் செயலகத்தின் உள்ளே (காவல்துறை வாகனங்கள்)
 
Edited by Siva