தொடர்புடைய செய்திகள்
- சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் உடன்பால் படத்திற்கு பாராட்டு!
- தாமிரபரணி ஆற்றில் 45,000 கன அடி நீர் வெளியேற்றம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!
- சென்னை போல் இல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்: தென்மாவட்ட மழை குறித்து அண்ணாமலை..!
- மகளிர் உரிமை தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் தங்கம் தென்னரசு..!
- அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!
மீண்டும் தங்கம் விலை சரிவு.. இன்றைய சென்னை நிலவரம்..!
தங்கம் விலை கடந்து சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது பொது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் வெள்ளி விலை என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூபாய் 5785.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 குறைந்து ரூபாய் 46280.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6255.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50040.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து கிராம் ஒன்றுக்கு ரூபாய் 80.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
