ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2023 (07:01 IST)

தாமிரபரணி ஆற்றில் 45,000 கன அடி நீர் வெளியேற்றம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

Thangam Thennarasu
தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை காரணமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
 
தாமிரபரணி ஆற்றில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்பட்சத்தில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், தற்போது தாமிரபரணி ஆற்றில் 45,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
 
மேலும் அதிகபட்சமாக தாமிரபரணி ஆற்றில் 65,000 கன அடி வரை நீர் வெளியேற்றம் செய்ய வாய்ப்புள்ளது என்றும், தற்போது வரை நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்,.
 
மழை வெள்ள மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும், சேதங்களை தவிர்க்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்,.
 
Edited by Siva