திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (08:03 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை வர பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

அரபிக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சென்னை உள்பட வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதனை அடுத்து மேற்கண்ட 14 மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva