1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.280 குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

சென்னை
கடந்த சில நாட்களாக  தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து உள்ளது. இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ரூபாய் 5735.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 280 குறைந்து  ரூபாய் 45880.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6205.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49640.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 100 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூபாய் 78.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை நிலவரம் என்ன? இன்றைய நிஃப்டி, சென்செக்ஸ் தகவல்கள்..!