ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (09:14 IST)

சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

சென்னை உள்பட 21 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கீழடுக்கு காற்றின் சுழற்சி காரணமாகவும் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதன் காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், தர்மபுரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் நல்ல மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது 
 
Edited by Siva