1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (13:01 IST)

தாமதமாக வந்த சென்னை – ஆலப்புலா ரயில்! – பயணிக்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு!

Train
ரயில் தாமதமாக வந்தது குறித்து வழக்கு தொடர்ந்த பயணிக்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



இந்திய ரயில்வேயின் ரயில் சேவை பல வழித்தடங்களிலும் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. பல சமயங்களில் சிக்னல் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரயில்கள் தாமதமாவது வாடிக்கையாக உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு சென்னை – ஆலப்புலா இடையேயான விரைவு ரயில் சேவை சுமார் 13 மணி நேரம் தாமதமாக நடந்துள்ளது. இதுகுறித்து அதில் பயணித்த பயணி ஒருவர் எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் மீதான விசாரணையை மேற்கொண்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதிகள், இந்திய ரயில்வே சேவை குறித்து அதிருப்தி தெரிவித்ததுடன், வழக்கு தொடர்ந்த சென்னையை சேர்ந்த கார்த்திக் மோகன் என்பவருக்கு இந்திய ரயில்வே ரூ.60 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Edit by Prasanth.K