1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்கம், வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

சென்னை
தங்கம் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் இன்றும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5550.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து ரூபாய் 44400.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6020.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48160.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூபாய் 78.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78300.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
எம்.பி.சி சாதிச்சான்றிதழ் வேண்டுமா? ரூ.5000 இருந்தால் போதுமானது.. ராமதாஸ் அதிர்ச்சி தகவல்..!