1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (10:32 IST)

எம்.பி.சி சாதிச்சான்றிதழ் வேண்டுமா? ரூ.5000 இருந்தால் போதுமானது.. ராமதாஸ் அதிர்ச்சி தகவல்..!

எம்பிசி சாதி சான்றிதழ் உள்பட பல போலி சான்றிதழ்கள் நடமாடி வருவதாகவும் இதனால் உண்மையாகவே பலன் கிடைக்கக் கூடியவர்கள் பலன் பெறாமல் போலியானவர்கள் பலன் பெற்று வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். 
 
இந்த நிலையில் எம்.பி.சி சான்றிதழ் வேண்டுமா, 5 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும் என  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது
 
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட  வகுப்பில் உள்ள சாதிகளின் பெயர்களில்  போலியான சாதிச் சான்றிதழ்களைப் பெறுவது இப்போது அதிகரித்து விட்டது.  அதற்காகவே உள்ள தரகர்களிடம் ரூ.5000 கொடுத்தால் போதும். உடனடியாக நீங்கள் கேட்கும் சாதிச் சான்றிதழ் கிடைத்து விடும்.
 
Edited by Mahendran