தொடர்புடைய செய்திகள்
- 230வது நாளாக மாறாத பெட்ரோல் விலை.. எப்போதுதான் குறையும்?
- சென்னையில் இன்று தொடங்குகிறது சர்வதேச புத்தக கண்காட்சி: பொதுமக்கள் ஆர்வம்!
- சென்னை புத்தக கண்காட்சியில் ‘ஜெய்பீம்’ : சூர்யா அறிவிப்பு!
- 2022- ஆம் ஆண்டில் வாகன விபத்து மற்றும் பலி எண்ணிக்கை 11% குறைவு- போக்குவரத்து போலீசார் தகவல்
- மதுபோதையில் போலீஸாருடன் தகராறு செய்த பெண்!
பெரும் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த தங்கம் விலை!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் இன்று சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 38 ரூபாய் சரிந்து ரூபாய் 5190.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 304 சரிந்து ரூபாய் 41520.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5552.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44416.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் சரிந்து ரூபாய் 73.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 73500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
